பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னருடன் சனம்ஷெட்டி? வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரிதான் என்பதே கிட்டத்தட்ட ஐம்பது நாட்களுக்கு முன்னரே பார்வையாளர்களுக்கு தெரிந்துவிட்டது. அவருக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆதரவும் ஒவ்வொரு முறையும் அவர் நாமினேட் செய்யப்படும்போது முதலாவதாக காப்பாற்றப்பட்டதும், அவருக்கு சமூக வலைதளங்களில் குவிந்து வரும் வாழ்த்துக்களும் திரையுலக பிரமுகர்கள் தெரிவித்துவரும் ஆதரவும் தெரிந்ததே.
இந்த நிலையில் இன்று பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார்? என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஃபினாலே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அனைத்து போட்டியாளர்களும் பிக்பாஸ் மேடைக்கு வந்து இருக்கின்றனர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் கூடிய நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் சனம் ஷெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் ஆரியுடன் இணைந்து ஃபினாலே நிகழ்ச்சியின்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். ஏற்கனவே அவர் பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தினராக சென்றபோது ஆரி டைட்டில் வெல்ல வேண்டும் என மனமார வாழ்த்து தெரிவித்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் என்று எதிர்பார்க்கப்படும் ஆரியுடன் இணைந்து சனம்ஷெட்டி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
?????? pic.twitter.com/GaRVQ2PKeO
— Sanam Shetty (@SanamShettyoff) January 17, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com