ஒரே ஒரு ட்விட் போட்ட சனம் ஷெட்டி.. பதறியடித்து அக்கவுண்ட்டை காலி செய்த நெட்டிசன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை சனம் ஷெட்டிக்கு நெட்டிசன் ஒருவர் டீப் பேக் வீடியோ வெளியிடுவேன் என்று மிரட்டல் விடுத்ததையடுத்து அதிரடியாக போலீஸ் புகார் கொடுப்பதாக அறிவித்தார். இதனை அடுத்து அந்த நெட்டிசன் பதறி அடித்து தனது சமூக வலைத்தள அக்கவுண்டையே டிஆக்டிவேட் செய்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகைகளின் ஒருவரும் பிக் பாஸ் போட்டியாளருமான சனம் ஷெட்டி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் அவரது ஒவ்வொரு பதிவுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அவரது பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனங்கள் நடுநிலையாக இருப்பதாக கூறப்படுவது உண்டு.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நெட்டிசன் சனம் ஷெட்டியின் டீப்பேக் வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டி உள்ளார். இதனை அடுத்து அதிரடியாக அந்த நபருக்கு பதிலடி கொடுத்த சனம் ஷெட்டி, ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நீ எப்படி தலையிடலாம், உன்னை போலீசில் பிடித்துக் கொடுக்காமல் விடமாட்டேன் என்று கூறியிருந்தார்
இதனை அடுத்து ஒரு சில நிமிடங்களில் அந்த நபர் தனது அனைத்து பதிவுகளையும் நீக்கிவிட்டு அக்கவுண்ட்டையும் டிஆக்டிவேட் செய்துவிட்டார். இனிமேல் யாராவது தனிப்பட்ட முறையில் மிரட்டல் விடுத்தால் இது போன்ற பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் சனம் ஷெட்டி கூறியுள்ளார்.
Yaara echai ???
— Sanam Shetty (@ungalsanam) January 30, 2024
React panna maten nu enna venaalum pesuvengala?? How dare you brand me as mental???
Oruthara stamp panrathu.. personal life pathi pesarathu..mental health vechi frame panrathu..avlo satharanama pocha???
Who the hell are you to come to my page and abuse me??… https://t.co/bGZHTZzXOr
Thank you for the timely action @tnpoliceoffl and @X 👏
— Sanam Shetty (@ungalsanam) January 30, 2024
This blackmailer @rationalindia19 has been removed and account is deactivated.
Next time these ppl will be investigated to find out if someone is paying them & will be legally held accountable for targetted personal… pic.twitter.com/99c25ysmTi
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com