பிக்பாஸ் வீட்டில் எதிர்பாராத வைல்ட்கார்ட் எண்ட்ரி? 

  • IndiaGlitz, [Wednesday,December 09 2020]

பிக்பாஸ் வீட்டில் தனி திறமையுடன் விளையாடிக்கொண்டிருந்த மிகச் சிலரில் ஒருவர் சனம்ஷெட்டி என்பது அனைவரும் அறிந்ததே. அவர் அனைத்து விஷயங்களிலும் மூக்கை நுழைப்பதாக விமர்சனம் செய்யப்பட்டாலும் தனக்கு சரி என்று தோன்றுவதையும் தனது கருத்தையும் போல்டாக தெரிவிப்பார் என்ற பாராட்டு அவருக்கு கிடைத்தது

அவர் வெளிப்படையாக தனது கருத்தை தெரிவித்ததால் அர்ச்சனா, பாலாஜி, ஆரி உள்பட அனைத்து போட்டியாளர்களுனும் அவர் மோதினார். இந்த நிலையில் கடந்த வாரம் ஞாயிறு அன்று குறைந்த வாக்குகள் பெற்றவர் அடிப்படையில் சனம்ஷெட்டி வெளியேற்றப்பட்டார். அவரது வெளியேற்றத்தை பிக்பாஸ் ரசிகர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. மிக்சர், வேர்க்கடலை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பலர் இன்னும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது தைரியமாக விளையாடிய சனம்ஷெட்டியை வெளியேற்றுவதா? என ரசிகர்கள் கொந்தளித்தனர்

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி சனம்ஷெட்டி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இன்னும் தனது சொந்த வீட்டிற்கு செல்லவில்லை என்றும் அவர் தனிமைப்படுத்துதல் ஹோட்டல் அறையில் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே யாரும் எதிர்பாராத வகையில் சனம்ஷெட்டி மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பு எழுந்துள்ளது

கடந்த சீசனிலும் குறைந்த வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்ட வனிதா ஒரு சில நாட்களில் மீண்டும் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக நுழைந்தார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சனம்ஷெட்டியும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே வர வாய்ப்பு இருக்கின்றதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்