உங்களுக்கு யார் ஷேவ் பண்ணி விடுவாங்க? ஏடாகூடா கேள்விக்கு பிக்பாஸ் சனம் ஷெட்டியின் தரமான பதிலடி..!

  • IndiaGlitz, [Friday,June 30 2023]

நடிகை சனம் ஷெட்டியிடம் ரசிகர் ஒருவர் உங்களுக்கு யார் ஷேவ் பண்ணி விடுவார்கள் என்ற கேள்விக்கு அவர் தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

’அம்புலி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் சனம் ஷெட்டி. இதனை அடுத்து அவர் ஒரு சில தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் அவர் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பதும் அந்த நிகழ்ச்சியில் அவர் 63 நாள் தாக்குப்பிடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது அவர் ரசிகர்களிடம் உரையாடுவது உண்டு என்பதும், ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவராசியமாக பதில் அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நேற்று அவர் ரசிகர்களிடம் பேசிய போது ’உங்களுக்கு யார் அக்குளில் சேவ் பண்ணுவது? என்ற ஏடாகூடமான கேள்வியை ஒரு ரசிகர் கேட்டிருந்தார். அதற்கு சனம் ஷெட்டி 'Gillette ன்னு ஒருத்தர் இருக்காரு’ என்று பதில் அளித்துள்ளார். இந்த பதில் தற்போது வைரல் ஆகி வருகிறது.