வெற்றி பெற்றிருந்தால் வெளியேறி இருப்பீர்களா? கமல் கட்சியில் இருந்து வெளியேறியவர்களை விளாசிய பிக்பாஸ் பிரபலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அதிமுக திமுகவை அடுத்து மூன்றாவது அணியாக போட்டியிட்டது என்பதும் ஆனால் அக்கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனிடம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தேர்தலுக்கு பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் விலகி வருவது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. துணை தலைவர் டாக்டர் மகேந்திரன், பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு மற்றும் பத்ம பிரியா ஆகியோர் விலகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான சனம் ஷெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் கமல் கட்சியிலிருந்து வெளியேறியவர்களை விளாசியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நீங்கள் இதுவரை வைத்திருந்த விசுவாசம் எங்கே போனது? உங்கள் எல்லோருக்கும் நான் கேட்கும் கேள்வி என்னவென்றால் தேர்தலில் வெற்றி பெற்று இருந்தால் நீங்கள் கட்சியிலிருந்து விலகி இருப்பீர்களா? கட்சியிலிருந்து விலகிய நீங்கள் கமல் அவர்களுக்கு மட்டும் நம்பிக்கை துரோகம் செய்யவில்லை, உங்களை நம்பி முதல் முறையாக வாக்களித்த இளைஞர்களையும் ஏமாற்றி விட்டீர்கள்’ என்று பதிவுசெய்துள்ளார். சனம் ஷெட்டியின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What is the 'personal reason'Mr @SanthoshBabuIAS Mrs @Tamizhachi_Offl Mr Mahendran & others?
— Sanam Shetty (@SamSanamShetty1) May 14, 2021
U campaigned to lakhs of people abt reasons to be in party. Now public wants to know why u quit@ikamalhaasan sir u don't need power to serve.Ur vision is enough.#staystrongkamalsir
Where is ur loyalty??
— Sanam Shetty (@SamSanamShetty1) May 14, 2021
My question to u all: would u still quit if u had won?
Resigned MNM party members have not only betrayed @maiamofficial party n leader @ikamalhaasan sir but mainly the people who voted for many 1st timers!#quitters #realfaces
https://t.co/phlZfN03sY
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com