அஜித் பட நடிகைக்கு பதில் சிம்பு நாயகி: விஷால் படக்குழு அதிரடி

  • IndiaGlitz, [Monday,March 11 2019]

விஷால் நடித்து வரும் 'அயோக்யா' திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தில் ஒரு குத்துப்பாடலில் நடனம் ஆட சமீபத்தில் ஷராதா ஸ்ரீநாத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் என செய்திகள் வெளிவந்தது. ஆனால் அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' உள்பட ஒருசில படங்களில் கமிட் ஆன ஷராதா ஸ்ரீநாத், இந்த பாடலில் திடீரென நடனமாட முடியாத நிலை ஏற்பட்டது

இதனையடுத்து 'அயோக்யா' படக்குழுவினர் அதிரடியாக ஷராதாவுக்கு பதிலாக நடிகை சனாகானை ஒப்பந்தம் செய்தனர். இவர் சிம்பு நடித்த 'சிலம்பாட்டம்' உள்பட ஒருசில படங்களில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சாம் சிஎஸ் இசையில் ரோகேஷ் எழுதிய இந்த பாடலை கேட்டதும் சனாகான் இந்த பாடலுக்கு நடனமாட ஒப்புக்கொண்டு உடனடியாக சென்னை வந்தார். இந்த பாடலின் படப்பிடிப்பு இந்த வாரத்திற்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஷால், ராஷிகண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், சச்சு, வம்சி கிருஷ்ணா, சோனியா அகர்வால், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள 'அயோக்யா' படத்தை வெங்கட்மோகன் இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையில் விஷ்ணு ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.

More News

முடிவுக்கு வந்த ஓவியாவின் அடுத்த பட படப்ப்பிடிப்பு!

பிக்பாஸ் புகழ் ஓவியா நடித்த '90ml' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து கலவையான, சர்ச்சைக்குரிய விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் இந்த படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவு இருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது

விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்: அஞ்சலியின் அடுத்த பணி ஆரம்பம்

'இறைவி' படத்தை அடுத்து விஜய்சேதுபதியுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் நடிகை அஞ்சலி, சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்தார் என்பது குறித்து வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

'நேர்கொண்ட பார்வை'க்கு பாடல் எழுதும் பிரபலம்

தல அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

2ஆம் பாகமாக உருவாகும் விஜய்சேதுபதியின் சூப்பர் ஹிட் திரைப்படம்

கோலிவுட் திரையுலகில் ரஜினி, கமல் படங்கள் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்கள் இரண்டாம் பாகமாக உருவாகி வெளிவந்து கொண்டிருக்கின்றது.

மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு: முழுவிபரம்

2019ஆம் ஆண்டின் மக்களவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் அதிகாரி சுனில்  அரோரா அறிவித்துள்ளார். நாடு முழுவதும் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது