சமுத்திரக்கனியின் 'தொண்டன்' தொடங்குவது எப்போது?

  • IndiaGlitz, [Friday,December 09 2016]

பிரபல இயக்குனர் சமுத்திரக்கனி நடித்து, தயாரித்து, இயக்கிய 'அப்பா' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக அவர் 'தொண்டன்' என்ற படத்தில் நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தை வசுந்தராதேவி சினிபிலிம்ஸ், நாடோடிகள் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது. 'அச்சம் என்பது மடமையடா', 'கிடாரி', 'பலே வெள்ளைத்தேவா' போன்ற படங்களை வெளியிட்ட வசுந்தரா சினிபிலிம்ஸ் முதன்முறையாக தயாரிக்கும் படம் 'தொண்டன்'

சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் விக்ராந்த், நமோ நாராயணன், தம்பி ராமையா, சூரி, கஞ்சா கருப்பு, உள்பட பலர் நடிக்கவுள்ளனர்.

வரும் 16ஆம் தேதி முதல் நெய்வேலியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. சமுத்திரகனி நடிப்பது மட்டுமின்றி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார்.

More News

அமீர்கானுக்கு டப்பிங் குரல் கொடுப்பாரா ரஜினிகாந்த்?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடித்துள்ள 'டங்கல்' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள...

ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டும் கின்னஸ் சாதனை காவலர்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் சொகுசு வாழ்க்கை அனுபவித்த பலர் அவரை அடுத்த நாளே மறந்துவிட்ட நிலையில் அவரால் எந்த உதவியும் பெறாத பலர் அவர் மீது...

துணை நடிகை ஜெயா கொலை வழக்கில் பிடிபட்ட தோழியின் வாக்குமூலம்

சென்னை சாலிகிராமம் பகுதியில் தனியாக வசித்து வந்த துணை நடிகை ஜெயா கொலை செய்யப்பட்டு அலங்கோலமாக கிடந்தார்...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். சசிகலாவுக்கு போட்டியாக களமிறங்குவாரா தீபா?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல்...

மரணத்திற்கு பின்பும் மக்களின் பசியாற்றும் 'தெய்வத்தாய்' ஜெயலலிதா

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவுச்சின்ன வளாகத்தில் இன்று...