'புலி'யை பாராட்டிய மேலும் ஒரு திரையுலக விஐபி
- IndiaGlitz, [Thursday,October 08 2015]
இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்திற்கு ஒருசில ஊடகங்கள் நெகட்டிவ் விமர்சங்களை கொடுத்திருந்தபோதிலும், நாளுக்கு நாள் தமிழ் திரையுலகினர்களின் ஆதரவு கூடிக்கொண்டே போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஏற்கனவெ 'புலி' படத்தையும் விஜய்யையும் ரஜினிகாந்த், டி.ராஜேந்தர், ஜெயம் ரவி, ஜீவா, தமன்னா, சமந்தா உள்பட பலர் பாராட்டியுள்ள நிலையில் தற்போது பிரபல இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனியும் 'புலி' படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். அவர் புலி படம் குறித்து கூறியதாவது:
"புலி. இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான ஒரு திரைப்படம். நமக்குள்ள இருக்கின்ற இயக்குனரை ஒரு இரண்டரை மணிநேரம் 'பேசாமல் இருப்பா' அப்படீன்னும் சொல்லிட்டு தியேட்டர்ல போய் பார்த்தா சந்தோஷமா என்ஜாய் பண்ணிட்டு வரலாம். நம்ம பள்ளியில படிக்கும்போது வேதாளக்கதைகளையும், அம்புலிமாமா கதைகளையும், சரித்திர கதைகளையும் படிக்கும்போது நம்ம மனசுக்கு ஓடியிருந்ததை அப்படியே நம் கண்முன்னாள் வைத்துள்ள ஒரு திரைப்படம் 'புலி'. இந்த படத்தை கண்டிப்பாக சிம்புதேவனால் மட்டுமே பண்ண முடியும்.
ஒரு பெரிய மாஸ் ஹீரோ, இதுபோன்ற ஒரு கதையை தேர்வு செய்ததே ஒரு பெரிய ஆச்சரியம். விஜய் சாருக்கு எனது வாழ்த்துக்கள். இதுபோன்ற கதைகளை எல்லா ஹீரோக்களும் செய்ய வேண்டும். நட்டியின் கேமரா, தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை மற்றும் சிஜி பணிகள் அனைத்துமே பிரம்மாதமாக இருந்தது. இந்த படத்தை குழந்தைகள் மற்றும் குடும்பத்தோடு சென்று சந்தோஷமாக என்ஜாய் செய்து வாருங்கள்
இவ்வாறு இயக்குனர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.