சமுத்திரக்கனியின் 'அப்பா'வுக்கு கிடைத்த அடுத்த மரியாதை

  • IndiaGlitz, [Wednesday,July 13 2016]

சமுத்திரகனி நடித்து, இயக்கி, தயாரித்த 'அப்பா' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி வெளியாகி ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனங்களால் மாபெரும் வெற்றி பெற்றதோடு இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்தை எல்லா அப்பாக்களும் பார்க்க வேண்டும் என்று ஒரு தலைமை ஆசிரியர் சுற்றறிக்கை அனுப்பியதையும் நேற்று பார்த்தோம்.
அதுமட்டுமின்றி தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தை தேனி, கோவை போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்காக சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த செய்திகள் ஒரு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என்ற வகையில் சமுத்திரக்கனிக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை கன்னடம் மற்றும் இந்தியில் டப் அல்லது ரீமேக் செய்ய சமுத்திரக்கனி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் சமுத்திரக்கனி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது இந்த படத்திற்கு கிடைத்த அடுத்த மரியாதையாக கருதப்படுகிறது.
இந்த படத்தின் வெற்றி காரணமாக சமூக அக்கறையுள்ள படங்கள் அதிகம் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வம் தனக்கு ஏற்பட்டுள்ளதாக சமுத்திரக்கனி மேலும் தெரிவித்துள்ளார்.

More News

'கபாலி' கவுண்ட் டவுன் ஆரம்பம். இன்னும் 8 நாட்களில் 'நெருப்புடா!!!

தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவில் ரிலீசுக்கு முன்னர் ஒரு திரைப்படத்திற்கு இவ்வளவு பிரமாண்டம் இருந்ததில்லை, இனிமேலும் இருக்க வாய்ப்பில்லை...

'அப்பா'வுக்காக சலுகைக்கட்டணம் வாங்கித்தந்த தலைமை ஆசிரியர்

சமுத்திரக்கனி இயக்கி, தயாரித்து நடித்த 'அப்பா' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது...

செஞ்சுரி அடித்தது சந்தானத்தின் 'தில்லுக்கு துட்டு'

கடந்த வாரம் வெளியான சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று நான்கே நாட்களில் ரூ.13.5 கோடி வசூல் செய்தது...

இரண்டு பெரிய வாய்ப்புகளை தவறவிட்ட சாய்பல்லவி

'பிரேமம்' படத்தின் மலர் கேரக்டர் மூலம் இளைஞர்களின் மனதில் குடிபுகுந்த சாய்பல்லவியை தேடி பல வாய்ப்புகள் கோலிவுட்...

நள்ளிரவில் ஹன்சிகா செய்தது என்ன? வைரலாகும் வீடியோ

நடிகை ஹன்சிகா திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையிலும் ஈடுபடும் தன்மை கொண்டவர் என்பதை அவ்வப்போது வரும் செய்திகளை பார்த்து வருகிறோம்...