போராட்ட களத்தில் திடீரென குதித்த சமுத்திரக்கனி
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே ஸ்டெர்லைட், நியுட்ரினோ, ஹைட்ரோகார்பன், காவிரி மேலாண்மை வாரியம் போன்ற காரணங்களுக்காக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தில் பாரதிராஜா, அமீர் உள்பட ஒருசில திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 77 நாட்களாக தூத்துகுடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களுக்கு ஏற்கனவே கமல்ஹாசன், சரத்குமார் போன்ற திரையுலக பிரபலங்கள் நேரில் ஆதரவு தெரிவித்து வந்தனர் என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் அருகே நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
23 ஆண்டுகளாக இந்த ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை பலர் இறந்து உள்ளனர். ஆனால் ஆஸ்பத்திரிகளில் அந்த இறப்பு இயற்கையானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்டெர்லைட் ஆலையை அப்புறப்படுத்தவில்லை என்றால் நமது அடுத்த தலைமுறையினர் குறைபாடுடன் பிறக்கும் நிலை ஏற்படும். எனவே எல்லோரும் ஒன்று சேர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை இங்கு இருந்து துரத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் வரை போராடுவோம் என்று சமுத்திரக்கனி கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments