ஹீரோவாக தயாராகி வருகிறாரா சமுத்திரகனி மகன்? வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Monday,January 03 2022]

நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரகனி தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் அவரது மகன் ஹீரோவாக தயாராகி வருவது போன்று அந்த புகைப்படம் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

’உன்னை சரணடைந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சமுத்திரகனி என்பதும் அதன்பின்னர் ’நெறஞ்ச மனசு’ ’நாடோடிகள்’ உள்பட பல திரைப்படங்களை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகராகவும் பல திரைப்படங்களில் சமுத்திரகனி நடித்து வருகிறார் என்பதும் ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சமுத்திரகனி நடிப்பில் வெளியான ’ரைட்டர்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சமுத்திரகனி சுமார் பத்து படங்களில் ஹீரோவாகவும் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமுத்திரகனி தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட சமுத்திரகனியின் உயரத்திற்கு இளைஞராக இருக்கும் அவரது மகன் விரைவில் ஹீரோவாக அறிமுகமாவாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். சமுத்திரக்கனி மகன் திரை உலகு வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.