கேப்டன் விஜயகாந்தின் 20 வருட கனவு.. சமுத்திரக்கனி சொன்ன சீக்ரெட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேப்டன் விஜயகாந்த் அரசியல் கட்சியை ஆரம்பிக்க வேண்டும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என 20 வருடங்களுக்கு முன்பே கனவு கொண்டிருந்தார் என்று சமீபத்தில் நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரை உலகில் அதிகமான இயக்குனர்களை அறிமுகம் செய்தது கேப்டன் விஜயகாந்த் என்பதும் நடிகர் சங்க கடனை அடைப்பதற்காக கமல், ரஜினி உட்பட ஒரு நட்சத்திர பட்டாளத்தையே மலேசியா சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று நடிகர் சங்க கடனை அடைத்தவர் என்ற பெருமை விஜயகாந்த்துக்கு உண்டு என்பது தெரிந்தது.
மேலும் அவர் திரை உலக நட்சத்திரங்களுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்து எண்ணம் கொண்டிருந்தவர் என்றும் அவர் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று 20 வருடங்களுக்கு முன்பே கனவு கண்டிருந்தார் என்றும் அவரது படத்தை இயக்கிய சமுத்திரக்கனி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சமுத்திரக்கனி கடந்த 2003 ஆம் ஆண்டு ’உன்னை சரணடைந்தேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நிலையில் அவரது இரண்டாவது படமே விஜயகாந்த் நடித்த ’நெறஞ்ச மனசு’ என்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது அவர் விஜயகாந்துடன் பலமுறை மனம் விட்டு பேசியதாகவும் அப்போது தமிழக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக விரைவில் அரசியல் கட்சி தொடங்குவேன் என்றும் தெரிவித்ததாக சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அவ்வப்போது விஜயகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிப்பார் என்றும் அவருடைய அரசியல் கட்சி என்பது 20 வருட கனவு என்றும் அதனால்தான் விஜயகாந்த் மறைந்த பின்னும் இன்றும் அவரது கட்சி தமிழகத்தில் வலுவாக இருக்கிறது என்றும் சமுத்திரக்கனி கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout