எனக்கு தெரிஞ்சு தெய்வம் கோவில்ல இல்ல, என் எதிர்ல இருக்கு, நீ தான்பா என் தெய்வம்: 'விமானம்' டீசர்

  • IndiaGlitz, [Saturday,May 13 2023]

சமுத்திரக்கனி மற்றும் மீரா ஜாஸ்மின் நடிப்பில் உருவான ‘விமானம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஜூன் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சட்டமும் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அப்பா அம்மா கடவுள் கிட்ட போயிட்டாங்கன்னு சொன்னிங்களே, விமானத்தில் தான போனாங்க என்று சிறுவன் அப்பாவியாக கேட்க அதற்கு சமுத்திரக்கனி ஆமாம் என்று சொல்ல ’அம்மா ரொம்ப கிரேட் அப்பா, விமானத்தில் ஏறி கடவுள் கிட்ட போய் இருக்காங்க’ என சிறுவனின் அப்பாவித்தனமாக வசனம் மனதை உருக்குகிறது

’விமானத்தில் என்னை ஒரு தடவை கூட்டிக் கொண்டு செல்கிறாயா அப்பா’ என சிறுவன் கேட்க அதற்கு சமுத்திரக்கனி, ’கண்டிப்பாக.. நீயும் நன்றாக படித்து முன்னேறினால் விமானத்தில் செல்லலாம்’ என்று சமுத்திரகனி மகனுக்கு ஊக்கம் அளிக்கும் காட்சி மனதை தொடுகிறது

’பஸ் ஓட்றவங்க எல்லாம் டிரைவர்ன்னு சொல்றாங்க, லாரி ஓட்டுறவங்களை டிரைவர்ன்னு சொல்றாங்க, அப்ப விமானத்துல ஓட்றவங்களை மட்டும் ஏன்டா பைலட்னு சொல்றாங்க’ என சிறுவன் தனது நண்பனிடம் கேட்க, அதற்கு அந்த நண்பன் ’பறக்கும்போது அவங்க தான்டா லைட்டை போடுறாங்க, அதனாலதான் பைலட்டுனு பேர் வந்துச்சு’ என்று கூறுவது நல்ல காமெடி.

’எனக்கு தெரிஞ்சு தெய்வம் கோவில்ல இல்ல, என் எதிர்ல இருக்கு, நீ தான்ப்பா என் தெய்வம்’ என மகன் கூறுவதை கேட்டு நெகிழ்ச்சியுடன் இருக்கும் சமுத்திரகனியின் நடிப்பு சூப்பர்..

மொத்தத்தில் விமானத்தில் பறக்க வேண்டும் என்ற மகனின் ஆசையை சமுத்திரக்கனி நிறைவேற்றினாரா? என்பது தான் இந்த படத்தின் கதை என இந்த டீசரில் இருந்து தெரியவருகிறது.

சமுத்திரக்கனி, மாஸ்டர் துருவன், மீரா ஜாஸ்மின், அனுசுயா பரத்வாஜ், உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை சிவபிரசாத் இயக்கியுள்ளார். சரண் அர்ஜுன் இசையில் உருவான இந்த படம் ஜூன் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.