பிரசாந்தின் 'அந்தகன்' படத்தில் இணைந்த பிரபல நடிகர்! அதிகாரபூர்வ அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ’அந்தாதூன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான ‘அந்தகன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நிலையில் சற்று முன்னர் இந்த படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
அந்தாதுன் படத்தின் ரீமேக் படமான ‘அந்தகன்’ படத்தை தியாகராஜன் இயக்கி வருகிறார் என்பதும் பிரசாந்த் மற்றும் சிம்ரன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் வனிதா, கார்த்திக், யோகி பாபு, கேஎஸ் ரவிக்குமார், உத்தரா மேனன், ஊர்வசி, மனோபாலா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் பிரபல நடிகர் சமுத்திரக்கனி இணைந்துள்ளார். இதனை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டார் மூவிஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரவி யாதவ் ஒளிப்பதிவில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிவரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்று கூறப்படுகிறது.
.@thondankani on Frame in #StaarMovies Production @actorprashanth *ing @actorthiagaraja Dir #Andhagan @PriyaAnand #RaviYadhav #SenthilRaghavan @SimranbaggaOffc #Karthik @iYogiBabu #KSRavikumar @utharamenon5 #Oorvasi @manobalam @vanithavijayku1 #LeelaSamson @onlynikil #NM pic.twitter.com/LHodFp4hc3
— Nikil Murukan (@onlynikil) April 8, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments