மீண்டும் தனுஷ் படத்தில் இணையும் பிரபல ஹீரோ: அதிகாரபூர்வ அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷின் 43வது படமான 'D43' என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதை பார்த்தோம். இந்தப் படத்தின் பாடல் ஒன்றின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் இந்த பாடலுக்காக தனுஷ் ரிகர்சல் செய்யும் புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தனுஷின் 'D43' திரைப்படத்தில் மாளவிகா மேனன் நாயகியாகவும் முக்கிய கேரக்டர் ஒன்றில் ஸ்ம்ருதி வெங்கட் நடிக்க இருப்பதாகவும் வெளிவந்த செய்தியைப் பார்த்தோம் தற்போது இந்த படத்தில் பிரபல ஹீரோ சமுத்திரகனி இணைந்துள்ளார் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
ஏற்கனவே தனுஷ் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் ’வேலையில்லா பட்டதாரி’, ’வேலையில்லா பட்டதாரி 2’ மற்றும் வட சென்னை ஆகிய படங்களில் இணைந்து நடித்து உள்ளனர் என்பதும் இதனை அடுத்து 'D43' திரைப்படத்தின் மூலம் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாக உள்ள இந்த படம் தனுஷின் இன்னொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Very happy to welcome the Versatile actor @thondankani to our team #D43 ????@dhanushkraja @karthicknaren_M @MalavikaM_ @gvprakash @smruthi_venkat @Lyricist_Vivek pic.twitter.com/fJoOV2ar6n
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) January 7, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments