close
Choose your channels

காதலர் தின வாழ்த்துக்கள்: ஒரு தந்தை மகனின் காதல் கதை.. 'ராமம் ராகவம்' கிளிம்ப்ஸ் வீடியோ..!

Thursday, February 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் இயக்குனர் சமுத்திரக்கனி நடித்து வரும் ‘ராமம் ராகவம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை தன்ராஜ் இயக்கி வருவது மட்டுமின்றி சமுத்திரக்கனிக்கு மகனாகவும் அவர் இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஹரிஷ் உத்தமன், சுனி, சத்யா, மோக்‌ஷா, பிரமோதினி, ஸ்ரீநிவாஸ்ரேட்டி உள்ளிட்ட பல நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் ஒரு தந்தை மகனுக்கு இருக்கும் பாசப்பிணைப்பை காட்டும் காட்சிகள் உள்ளன. மேலும் இந்த வீடியோவின் இறுதியில் ’என் காதல் ஆரம்பமானது உன்னால் தான், காதலர் தின வாழ்த்துக்கள்’ என்று சமுத்திரக்கனி பேசும் வசனமும் உள்ளது.

தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment