காதலர் தின வாழ்த்துக்கள்: ஒரு தந்தை மகனின் காதல் கதை.. 'ராமம் ராகவம்' கிளிம்ப்ஸ் வீடியோ..!

  • IndiaGlitz, [Thursday,February 15 2024]

நடிகர் இயக்குனர் சமுத்திரக்கனி நடித்து வரும் ‘ராமம் ராகவம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை தன்ராஜ் இயக்கி வருவது மட்டுமின்றி சமுத்திரக்கனிக்கு மகனாகவும் அவர் இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஹரிஷ் உத்தமன், சுனி, சத்யா, மோக்‌ஷா, பிரமோதினி, ஸ்ரீநிவாஸ்ரேட்டி உள்ளிட்ட பல நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் ஒரு தந்தை மகனுக்கு இருக்கும் பாசப்பிணைப்பை காட்டும் காட்சிகள் உள்ளன. மேலும் இந்த வீடியோவின் இறுதியில் ’என் காதல் ஆரம்பமானது உன்னால் தான், காதலர் தின வாழ்த்துக்கள்’ என்று சமுத்திரக்கனி பேசும் வசனமும் உள்ளது.

தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

More News

வெற்றிமாறன் அடுத்த படத்தில் கவின், நயன்தாரா? வேற லெவல் தகவல்..!

வெற்றிமாறன் அடுத்த படத்தில் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்க உள்ளதாக வேற லெவலில் ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

அசோக்செல்வன் படம் உள்பட 3 தமிழ்ப்படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் தகவல்கள்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் அசோக் செல்வன் திரைப்படம்

பூஜையுடன் துவங்கிய ஏ.ஆர்.முருகதாஸ்- சிவகார்த்திகேயன் திரைப்படம்.. புகைப்படஙக்ள் இதோ..!

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஆக்சன் எண்டர்டெயினர் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

காதலர் தினத்தில் மனைவியுடன் ஒரு ரொமான்ஸ் போட்டோஷூட்..  ஜாலி மூடில் கவின் - மோனிகா தம்பதி..!

சமீபத்தில் தனது காதலி மோனிகாவை திருமணம் செய்து கொண்ட நடிகர் கவின் காதலர் தினத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கார்த்தி தங்கையாக நடிக்க ஒப்புக் கொண்ட பிரபல நடிகை.. என்ன காரணம்?

பொதுவாக பிரபல நடிகைகள் பிரபல ஹீரோக்களுக்கு சகோதரியாக நடிப்பதற்கு தயங்குவார்கள் என்பதும் பல நடிகைகள் அப்படி வாய்ப்பு வந்த போது நடிக்க முடியாது என்று கூறி இருப்பதாகவும்