இன்று முதல் சமுத்திரக்கனியின் ஜிஎஸ்டி இல்லாத பெட்டிக்கடை

  • IndiaGlitz, [Friday,February 08 2019]

நடிகர் சமுத்திரக்கனி குணசித்திர மற்றும் வில்லன் கேரக்டர்களில் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் திரைப்படமான 'பெட்டிக்கடை' என்ற படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டைட்டிலான 'பெட்டிக்கடை'க்கு கீழே 'ஜிஎஸ்டி இல்லாத' என்ற வார்த்தை படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி, வீரா, வர்ஷா, சாந்தினி, சுந்தர் உள்பட பலர் நடித்துள்ளனர். மரியா மனோகர் இசையில் உருவாகிய இந்த படத்தில் இடம்பெற்ற 'சுடலைமாட சாமிகிட்ட' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ஹிட்டாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்டிக்கடைகள் என்பது நமது நாட்டில் குறிப்பாக கிராமப்புரத்தில் இன்றியமையாத ஒன்றாக இருந்தது. ஆனால் சூப்பர் மார்க்கெட் மற்றும் ஆன்லைன் வர்த்தகம் ஆரம்பித்த பின்னர் பெட்டிக்கடைகளின் நிலை என்ன ஆனது? என்பதுதான் இந்த படத்தின் கதை

More News

விசாகன் - செளந்தர்யா ரிசப்ஷன்: வைரலாகும் புகைப்படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளான செளந்தர்யாவுக்கும் நடிகரும் தொழிலதிபருமான விஷாகனுக்கும் வரும் 11ஆம் தேதி திருமணம் நடைபெறவிருக்கும் நிலையில் இன்று

'வர்மா' டிராப்: அதிர்ச்சியில் நாயகி மேகா செளத்ரி

தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, சென்சார் சான்றிதழ் பெற்ற பின், ரிலீசுக்கு ஒருசில நாட்கள் இருக்கும்போது திடீரென அந்த படத்தை கைவிட்டு மீண்டும் புதியதாக படப்பிடிப்பு

தளபதி விஜய்க்கு ஒரு தரலோக்கல் பாடல் கம்போஸ் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்றது.

கமல் செய்வது அரைவேக்காட்டுத்தனம்! பிரபல நடிகர்

வரும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைக்க ஒருசில கட்சிகளுடன் பேசிக்கொண்டிருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பேட்டியளித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்,

சென்னையில் சிறப்பு பூஜை: அஜித் பட தயாரிப்பாளர் போனிகபூர் ஏற்பாடு!

பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் வரும் 24ஆம் தேதி சென்னையில் சிறப்பு பூஜை செய்ய ஏற்பாடு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.