சமுத்திரக்கனியின் 'கொளஞ்சி' ரிலீஸ் தேதி மாற்றம்

  • IndiaGlitz, [Wednesday,July 17 2019]

இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் தனராம் சரவணன் இயக்கிய 'கொளஞ்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த படம் ஜூலை 19 ரிலீஸ் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது ஜூலை 26 என மாற்றப்பட்டுள்ளது

புதிய ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றையும் தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சமுத்திரகனி, சங்கவி, ராஜாஜி, பிச்சைக்காரன் மூர்த்தி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். விஜயன் முனுசாமி ஒளிப்பதிவில் அத்தியப்பன் சிவா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் நவீன் தயாரித்துள்ளார்

இயக்குனர் சமுத்திரக்கனி நடித்த கென்னடி கிளப்', 'ஆர்.ஆர்.ஆர்', சில்லுக்கருப்பட்டி', 'அடுத்த சாட்டை', 'வெள்ளைய் யானை', உள்பட ஒருசில திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது