சமுத்திரக்கனி படத்தில் இருந்து வரலட்சுமி விலக இவர்தான் காரணமா?

  • IndiaGlitz, [Thursday,March 30 2017]

சமுத்திரக்கனி இயக்கிய வெற்றிப்படமான 'அப்பா' படத்தின் மலையாள ரீமேக் படமான 'ஆகாஷ் மிட்டாய்' என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது கொச்சியில் நடைபெற்று வருகிறது. சமுத்திரக்கனி நடித்த வேடத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கவிருந்த நிலையில் திடீரென அவர் இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.


இந்த படத்தில் இருந்து விலகியது குறித்து வரலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'ஆணாதிக்கம் மற்றும் நற்பண்பு இல்லாத தயாரிப்பாளர்களுடன் தன்னால் பணியாற்ற முடியாது, தன்னுடைய இந்த முடிவுக்கு ஆதரவாக இருந்த சமுத்திரக்கனி மற்றும் ஜெயராம் ஆகியோர்களுக்கு நன்றி என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். வரலட்சுமி குறிப்பிட்ட நபர் யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தற்போது அவர் யார் என தெரியவந்துள்ளது.

நேற்று இரவு கொச்சியில் உள்ள ஓட்டல் ஒன்றில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது அங்கு வந்த ஒருசில ரவுடிகள் படத்தின் தயாரிப்பாளரான மஹா சுபைரை சரமாரியாக தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நற்பண்பு இல்லாத, ஆணாதிக்கம் மிக்க தயாரிப்பாளர் என்று வரலட்சுமி கூறியது தயாரிப்பாளர் மஹா சுபைர் ஆக இருக்கலாம் என்று தற்போது கூறப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வரலட்சுமி மேலும் கூறியபோது, 'இந்த விஷயத்தை மேலும் கிளர விரும்பவில்லை. அந்த படத்தின் தயாரிப்பாளர் நடந்து கொண்ட விதம் எனக்கு முற்றிலும் அதிருப்தி ஏற்படுத்தியதால் அவருடன் தொடர்ந்து பணிபுரிய முடியாது என்று விலகிவிட்டேன்' என்று கூறினார்.

More News

'விஸ்வரூபம் 2' படத்துக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து, தயாரித்து இயக்கிய 'விஸ்வரூபம்' படத்திற்கு ஏற்பட்ட தடை நாடு அறிந்தது. ஒருசில மத அமைப்புகளும், அன்றைய தமிழக அரசும் மாறி மாறி தடை போட்டது....

புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா. நடிகர் சங்கத்தின் அதிகாரபூர்வ அறிக்கை

சமீபத்தில் கூடிய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுவில் நடிகர் சங்கத்திற்கு என புதிய்தாக கட்டப்பட்டும் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா மார்ச் 31ஆம் தேதி நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது.

IIFA விருது பெற்ற தமிழ் நட்சத்திரங்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட ஆகிய நான்கு தென்னிந்திய மொழி படங்களுக்கு வழங்கப்படும் IIFA என்று கூறப்படும் இண்டர்நேஷனல் இந்தியன் பிலிம் அகாடமி விருதுகள் வழங்கும் விழா நேற்றும் இன்றும் ஐதராபாத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது...

கமல் ஒரு அகங்காரம் பிடித்த முட்டாள், ரஜினி ஒரு கோழை: சுப்பிரமணியன் சுவாமி

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த சில மாதங்களாக தமிழகத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்

மீண்டும் எழுச்சி பெறும் தமிழ் இளைஞர்கள்.

தமிழக மக்களின் கோரிக்கைகளுக்காக இனிமேல் அரசியல்வாதிகளை நம்பி பயனில்லை, மக்களே களத்தில் இறங்கினால்தான் காரியம் நடக்கும் என்பதை நிரூபித்த நிகழ்ச்சி சென்னை மெரீனா ஜல்லிக்கட்டு போராட்டம். உலகப்புகழ் பெற்ற தமிழ் இளைஞர்களின் இந்த எழுச்சி போராட்டத்தால் ஜல்லிக்கட்டு பிரச்சனை முடிவுக்கு வந்தது