'நேர்மை' டுவீட்டால் சமுத்திரக்கனி படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமுத்திரக்கனி நடித்த 'சாட்டை' படத்தின் இரண்டாம் பாகமாக 'அடுத்த சாட்டை' என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அன்பழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி, அதுல்யா ரவி, தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றிய லைக்கா நிறுவனம், ஒரே நாளில் 'ஐங்கரன்' மற்றும் 'அடுத்த சாட்டை' ஆகிய இரண்டு படங்களை வெளியிட இருப்பதாக அறிவித்தது
இந்த நிலையில் நேற்று நடிகர் சமுத்திரக்கனி தனது டுவிட்டர் பக்கத்தில் 'நேர்மை இல்லை' என்று ஒரு பதிவை செய்துள்ளார். இந்த பதிவில் உள்ள 'நேர்மை' யாரை குறிக்கின்றது என்று பலரும் கேள்வி எழுப்பி நிலையில் அடுத்த சில மணி நேரத்தில் 'அடுத்த சாட்டை' படத்திற்கும் லிப்ரா நிறுவனத்திற்கும் தொடர்பில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் சமுத்திரக்கனி அறிவித்தார்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் லிப்ரா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் 'நாங்கள் கொடுத்த ஐம்பது லட்ச ரூபாய் தவிர எங்களுக்கும் 'அடுத்த சாட்டை' திரைப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அதை அவர்கள் நியாயப்படி திருப்பித் தருவார்கள் என்ற நேர்மையை லிப்ரா புரொடக்ஷன் எதிர்பார்க்கிறது என்றும் தெரிவித்தார்
இந்த டுவிட்டர் போர் காரணமாக சமுத்திரக்கனி நடித்த 'அடுத்த சாட்டை' திரைப்படம் ரிலீசில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது
நேர்மை இல்லை..
— P.samuthirakani (@thondankani) August 27, 2019
லிப்ரா புரொடக்ஷன்ஸ் திரு. ரவீந்திரன் சந்திரசேகரன் அவர்களுக்கும் "அடுத்த சாட்டை" திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துக் கொள் கிறோம்.. pic.twitter.com/RoKdErFmoW
— P.samuthirakani (@thondankani) August 27, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout