இயக்குனர்களை அவமதிக்க வேண்டாம்: வடிவேலுக்கு சமுத்திரக்கனி கண்டனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2' படத்தின் பிரச்சனை கடந்த சில வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த வடிவேலு, இயக்குனர் சிம்புதேவன் மற்றும் ஷங்கர் ஆகியோர் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்ததோடு, ஒருமையிலும் பேசினார்.
வடிவேலு என்ற நடிகர் மாபெரும் கலைஞனாக இருந்தாலும் மற்ற கலைஞர்களை மதிக்க தெரியாதவர் என்று திரையுலகில் இருந்து பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி வடிவேலுக்கு தனது சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: அண்ணன் வடிவேலு அவர்களின் பேட்டி பார்த்தேன். இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவன் இருவரையும் நாகரீகமற்ற வார்த்தையால் பேசியிருப்பது பெரும் வருத்தத்திற்கும் கண்டணத்திற்கும் உரியது. சிம்புவின் கிரியேட்டிவ் புலிகேசி தவிர்த்து மற்ற படைப்புகளிலும் தெரியும். இயக்குநர்களை அவமதிக்காதீர்கள்!
அண்ணன் வடிவேலு அவர்களின் பேட்டி பார்த்தேன். இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவன் இருவரையும் நாகரீகமற்ற வார்த்தையால் பேசியிருப்பது பெரும் வருத்தத்திற்கும் கண்டணத்திற்கும் உரியது. சிம்புவின் கிரியேட்டிவ் புலிகேசி தவிர்த்து மற்ற படைப்புகளிலும் தெரியும். இயக்குநர்களை அவமதிக்காதீர்கள்!
— P.samuthirakani (@thondankani) June 11, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout