'குணா' கேரக்டரில் பிரபல நடிகர்: தனுஷ் தகவல்

  • IndiaGlitz, [Thursday,August 16 2018]

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள சமுத்திரக்கனியின் கேரக்டர் குறித்த தகவலை சற்றுமுன் நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

சமுத்திரக்கனி இந்த படத்தில் 'குணா' என்ற கேரக்டரில் நடித்துள்ளதாக தனுஷ் கூறியதோடு சமுத்திரக்கனியின் ஃபர்ஸ்ட்லுக்கையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் கன்னத்தில் அலகு குத்தி சாமி வந்தவராக சமுத்திரக்கனி ஆக்ரோஷமாக தோற்றமளிக்கின்றார். இந்த கேரக்டர் சமுத்திரக்கனிக்கு நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை தந்திருக்கும் என்பது உறுதி

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், உள்பட பலர் நடித்துள்ள 'வடசென்னை' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவில், ஜிபி வெங்கடேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

பிக்பாஸ் 2: ஐஸ்வர்யாவின் தலைமுடியை பிடித்த இழுத்த செண்ட்ராயன்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று நாட்களாக டாஸ்க் காரணமாக இடைவிடாத சண்டை நடந்து வருகிறது.

'காற்றின் மொழி' ஜோதிகாவின் 'பத்து கட்டளைகள்'

ஜோதிகா நடிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'காற்றின் மொழி' படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வரும் நிலையில்

என்ன தலையை சீவிடிவியா நீ? பாலாஜியின் ஆவேசம்

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக இரண்டு இரண்டு பேர்களாக சண்டை போட்டு வருவது தெரிந்ததே.

செக்க சிவந்த வானம்: ஜோதிகாவின் கேரக்டர் அறிவிப்பு

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள 'செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்த பிரபல நடிகர்களின் கேரக்டர்கள் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் குறித்த அறிவிப்புகள் கடந்த மூன்று நாட்களாக வெளியாகி வருகிறது.

விருதுகளை அள்ள காத்திருக்கும் விஜய்யின் 'மெர்சல்'

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியான 'மெர்சல்' திரைப்படம் ஏற்கனவே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு