close
Choose your channels

ராமர் கோவில் திறப்பு தினத்தில் சமுத்திரக்கனி செய்யும் செயல்.. நெட்டிசன்களின் ரியாக்சன்..!

Sunday, January 21, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் நாளை தனது அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட இருப்பதாக நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். இதில் உள்ள விசேஷம் என்னவென்றால் அவர் இன்று வெளியிட்டுள்ள போஸ்டரில் ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் அனுமன் சிலைகள் இருக்கும் புகைப்படத்தையும், பின்னணியில் ராமர் கோயில் புகைப்படத்தையும் பதிவு செய்தது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் இயக்குனர்களில் ஒருவரான சமுத்திரக்கனி, திரை உலகில் பிஸியான நடிகராக உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இயக்குனர் சமுத்திரக்கனி தனது சமூக வலைதளத்தில் சற்றுமுன் ஒரு பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் ’ஸ்ரீ ராமரின் தெய்வீக ஆசீர்வாதத்துடன்’ நாளை அதாவது ஜனவரி 22 ஆம் தேதி 12.20 மணிக்கு டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் ராமர் கோயில் பின்புலத்துடன் ராமர், சீதை, அனுமன் இருக்கும் சிலையையும் அவர் பதிவு செய்துள்ளதை அடுத்து நெட்டிசன்கள் இதற்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

இந்த அறிவிப்பை அவர் தமிழ் தெலுங்கு மொழியில் வெளியிட்டுள்ளதால் இந்த படம் தமிழ் தெலுங்கு மொழியில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில் ராமருடன் சம்பந்தப்பட்ட டைட்டில் ஆக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment