'டான்' படத்தில் இணைந்த மேலும் இரண்டு பிரபலங்கள்!

  • IndiaGlitz, [Wednesday,February 03 2021]

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ‘டான்’ குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்த நிலையில் இன்று இந்த திரைப்படத்தில் நடிக்க முக்கிய பிரபலங்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன.

முதலாவதாக இந்த படத்தின் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் அதனை அடுத்து எஸ்ஜே சூர்யா இந்தப் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் மேலும் இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

‘டான்’ திரைப்படத்தில் பிரபல தமிழ் நடிகர் சமுத்திரக்கனி மற்றும் நகைச்சுவை நடிகர் சூரி ஆகிய இருவரும் இணைந்துள்ளனர் என்று சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் யாரெல்லாம் இந்த படத்தில் இணைய உள்ளனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். சிபி சக்கரவர்த்தி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.