மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைகிறாரா சமுத்திரக்கனி?
Sunday, March 27, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
நாடோடிகள், போராளி உள்பட பல படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சமுத்திரக்கனி கடந்த 2014ஆம் ஆண்டு ஜெயம் ரவி, அமலாபால் நடித்த 'நிமிர்ந்து நில்' படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பினை அடுத்து தற்போது மீண்டும் ஜெயம் ரவியுடன் சமுத்திரக்கனி இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சமுத்திரக்கனி தற்போது கிட்னா, அப்பா என இரு படங்களில் நடித்தும், இயக்கியும் வருகிறார். அதே நேரத்தில் ஜெயம் ரவி தற்போது 'போகன்' படத்தில் நடித்து வருகிறார். இருவருடைய தற்போதைய படங்கள் முடிந்த பின்னர் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
போகன்' படத்திற்கு பின்னர் ஜெயம் ரவி மீண்டும் 'மிருதன்' இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும், ஏ.எல்.விஜய் மற்றும் கவுதம் மேனன் ஆகியோர்களும் ஜெயம் ரவியின் அடுத்தடுத்த படங்களை இயக்கவுள்ளதாக செய்திகள் ஏற்கனவே வெளிவந்துள்ள நிலையில் தற்போது இந்த பட்டியலில் சமுத்திரக்கனியும் இணைந்துள்ளார். 'போகன்' படப்பிடிப்பு முடிந்த பின்னரே ஜெயம் ரவி, அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்பது குறித்து உறுதியாக தெரியவரும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments