'சூர்யா 37' படத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'என்.ஜி.கே. என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் முடிவடையவுள்ள நிலையில் அடுத்த மாதம் முதல் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் படத்தில் நடிக்கவுள்ளார்
அயன், மாற்றன், படங்களுக்கு பின்னர் மீண்டும் இணையும் சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணியின் படத்தின் நாயகி நடிகை சாயிஷா என்பதை நேற்று பார்த்தோம். அதுமட்டுமின்றி இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் அல்லுசிரிஷ் ஆகியோர்களும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது மேலும் இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளனர். அவர்கள் சமுத்திரக்கனி மற்றும் பிரபல பாலிவுட் பிரபலம் பொமன் இரானி ஆகியோர்கள் ஆவர். சமுத்திரக்கனி ஏற்கனவே சூர்யாவுடன் 'மாஸ்' படத்தில் நடித்தவர் என்பதும் பொமன் இரானி இந்த படத்தின் மூலம் முதன்முதலாக கோலிவுட்டில் அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். சூர்யா நான்கு விதமான கெட்டப்பில் நடிக்கவுள்ள இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout