சமுத்திரக்கனியுடன் நடிக்கும் பாரதிராஜா.. டைட்டில்-பர்ஸ்ட் லுக் ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாரதிராஜா நடிப்பில், மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’மார்கழி திங்கள்’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில் தற்போது பாரதிராஜா நடிக்க இருக்கும் இன்னொரு திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கும் ’திரு.மாணிக்கம்’ என்ற திரைப்படத்தில் தான் பாரதிராஜா நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது
மேலும் இந்த படத்தை நந்தா பெரியசாமி இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ‘ஒரு கிடாயின் கதை’, ‘மாத்தியோசி’, ‘அழகன் அழகி’, ’ஆனந்தம் விளையாடும் வீடு’ போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஷால் சந்திரசேகர் இசை அமைக்கும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவும், ராஜா சேதுபதி படத்தொகுப்பு பணியும் செய்ய உள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’எளிய மனிதர்களின் வாழ்வே அறம்’ என்ற கேப்ஷன் உடன் வெளியாகியுள்ள ’திரு.மாணிக்கம்’ படத்தின் போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் சமுத்திரகனி ஏற்கனவே ’இந்தியன் 2 மற்றும்’ ’கேம் சேஞ்சர்ன்’ ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.
Happy to launch the first look of my dear venkatprabu &vijaysethupathi@thondankani
— Bharathiraja (@offBharathiraja) September 20, 2023
's #ThiruManickam directed by @Nandaperiyasamy
My heartiest wishes to the entire team for grand success . @offBharathiraja@gprkcinema@rajasenthil_rs@mynnasukumar@Composer_Vishal… pic.twitter.com/SF29eW11yZ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com