சுந்தர் சி உதவியாளர் படத்தில் சமுத்திரக்கனி

  • IndiaGlitz, [Sunday,January 03 2016]

கடந்த புத்தாண்டு தினத்தில் சமுத்திரக்கனி நடித்த 'தற்காப்பு' திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் சமுத்திரக்கனியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

சுந்தர் சியிடம் பல படங்களுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்த ராஜதுரை என்பவர் இயக்கும் ஒர் புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க சமுத்திரக்கனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் 'தமிழுக்கு எண் 1ஐ அழுத்தம்' பட நாயகி ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினாக நடிக்கின்றார்.

சமுத்திரக்கனியை அடுத்து இரண்டாவது ஹீரோவாக கோபி என்பவர் அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு 'சத்தம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது ஒரு ஆக்சன் த்ரில் படம் என்றும் கூறப்படுகிறது.

இம்மாத இறுதியில் கொடைக்கானலில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் கிட்டத்தட்ட முழுபடமும் கொடைக்கானலிலேயே எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.