Samsung ரசிகர்கள் யாரவது இருக்கீங்களா..?! இந்தியாவில் வெளியாகிறது.. Samsung Galaixy Note 10 Lite..!

  • IndiaGlitz, [Friday,January 10 2020]

Galaxy S10 Lite உடன் Samsung Galaxy Note 10 Lite கடந்த வாரம் உலகளவில் வெளியிடப்பட்டது. இப்போது, ​​இந்திய விற்பனையாளர் விஜய் சேல்ஸ் இணையதளத்தில் வரவிருக்கும் போனைப் பற்றி பேனர் வெளியிடப்பட்டுள்ளது. Samsung Galaxy Note 10 Lite விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது Galaxy Note 10 ஸ்மார்ட்போனின் watered-down பதிப்பாகும். இது மலிவு விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் Galaxy Note 10 Lite-ன் விலையும் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் Samsung Galaxy Note 10 Lite-ன் ஆரம்ப விலை ரூ. 35,990-யாக அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் Galaxy Note 10-ஐப் போலவே S Pen stylus-ம், பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது.

Galaxy Note 10-ல் உள்ளதைப் போலவே Samsung Galaxy Note 10 Lite-ம் டிஸ்ப்ளேவின் மையத்தில் punch hole உடன் ஒரு hole-punch டிஸ்ப்ளே உள்ளது. Samsung, இந்த ஸ்மார்ட்போனை 6GB RAM மற்றும் 8GB RAM என இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஸ்டோரேஜ் 128GB உள்ளது. அடிப்படை வேரியண்ட் ரூ. 35,990-யாகவும், உயர் வேரியண்டின் விலை ரூ. 39.990-யாகவும் விலையிடப்பட்டுள்ளது. இதற்கு மாறாக, இந்தியாவில் Samsung Galaxy Note 10-ன் விலை ரூ. 69,999 ஆகும்.

Samsung Galaxy Note 10 Lite சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 6.7-inch full-HD+ Infinity-O Super AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது என்பதை அறிவோம். இந்த போன் Bluetooth Low-Energy standard வழியாக செயல்படும் stylus உடன் வருகிறது. இது சர்வதேச அளவில் 10nm octa-core Exynos 9810 SoC-யால் இயக்கப்படுகிறது. ஆனால், சிப்செட் வெவ்வேறு சந்தைகளில் மாறுபடும். Galaxy Note 10 Lite பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பையும் 32-megapixel selfie shooter-ஐயும் கொண்டுள்ளது. இது ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது in-display fingerprint ஸ்கேனரையும் கொண்டுள்ளது.