நீங்கள் Emotional eater ஆ? உடல்எடை பிரச்சனைக்கு தமிழ் நடிகையின் எளிய டிப்ஸ்!
- IndiaGlitz, [Wednesday,August 04 2021]
தல அஜித் நடித்த “அசல்”, நடிகர் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்”, “நடுநிசி நாய்கள்”, “வெடி”, “வேட்டை” போன்ற தமிழ்ப் படங்களில் நடித்தவர் நடிகை சமீரா ரெட்டி. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துவந்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தொழில் அதிபர் அக்சய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு 105 கிலோ உடல்எடையில் இருந்த இவர் தற்போது படு ஸ்லிம்மாக வலம் வருகிறார். மேலும் தாய்மை குறித்தும் குழந்தை பராமரிப்பு குறித்தும் ஏராளாமான ஆலோசனைகளை தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் நடிகை சமீரா ரெட்டிக்கு ஏராளாமான ஃபாலோயர்கள் உள்ளனர்.
இந்நிலையில் தனது ஃபாலோயர்களுக்கு நடிகை சமீரா அட்டகாசமான ஒரு டிப்ஸை கொடுத்துள்ளார். அதாவது கடந்த 6 மாதத்தில் தனது 10 கிலோ எடையைக் குறைத்துவிட்டதாகக் கூறிய சமீரா நீங்கள் அவசியம் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று பதிவிட்டு உள்ளார்.
இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டா பதிவில், நீங்கள் ஒரு Emotional eater ஆ? எனக் கேள்வியைக் கேட்ட நடிகை சமீரா, நாம் டயட் குறித்தும், ஆரோக்கியமான உணவு வகைகள் குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறோம். ஆனால் அதை கடைப்பிடிப்பது ரொம்பவே கடினம்.
இந்நிலையில் உணர்ச்சி வசப்பட்டு சாப்பிடுவதை நான் குறைத்ததால் கடந்த 6 மாதத்தில் 10 கிலோ எடையை குறைத்து இருக்கிறேன். நீங்கள் ஒரு உணர்ச்சி வசப்பட்ட தருணத்தில் உடனடியாகச் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு வரும். அதனால் பசிக்கிறது எனக் கூறிக்கொண்டு அளவே இல்லாமல் சாப்பிட்டு விடுவீர்கள்.
அதேபோல குற்றஉணர்வு மேலிடும்போது இப்படித்தான் நடக்கிறது. எதிர்மறை எண்ணங்கள் இருக்கும்போதும் இதே கதைதான். எனவே உங்களுடைய எதிர்மறை, குற்றஉணர்வுகளுக்கான காரணத்தை தெரிந்து கொண்டு அதைப் போக்கவேண்டுமே தவிர பசிக்காமலே சாப்பிட்டு அதனால் உடல்உபாதைகளைச் சம்பாதித்துக் கொள்ளக்கூடாது.
இதனால் உணர்ச்சிவசப்பட்டு சாப்பிடுவது, உணவின் மீதுள்ள கவர்ச்சியால் சாப்பிடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு எது உண்மையான பசி? எது பொய்யான (உணர்ச்சிவசப்பட்ட) பசி என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
உண்மையான பசி என்பது மெதுமெதுவாக நமக்கு ஏற்படுவது. உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நமக்கு உடனடியாக பசி வந்துவிடும். கூடவே உடனே சாப்பிட்டு விட வேண்டும் என்ற உணர்வு தோன்றும். இதனால் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். மேலும் உங்களுடைய கோபத்திற்கும் பதற்றத்திற்கும் என்ன காரணம் என்பதை தெரிந்து கொண்டு அதை தவிர்க்கப் பாருங்கள்.
உணர்ச்சி வசப்பட்டவர்கள் சாப்பிடும்போது வேகமாகச் சாப்பிடுவார்கள். சில நேரத்தில் இப்படி சாப்பிட்ட பின்பும் சில நல்ல உணவுகளை உங்களுடைய மனம் கேட்கும்.
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பசி வந்தால் தண்ணீரை அதிகமாகக் குடியுங்கள். அந்த உணர்ச்சி, பதற்றத்திற்கு காரணத்தைக் கண்டுபிடித்து அதில் இருந்து வெளிவர பாருங்கள்.
நல்ல தூக்கம் மன அழுத்தத்தில் இருந்து உங்களை மீட்க உதவும். இப்படி செய்யும்போது அனாவசியமாகப் பசியெடுக்காது.
இரவு உணவுக்குப்பிறகு ஸ்நேக்ஸ் வகைகளைத் தவிர்க்க வேண்டும். உங்களுடைய உணவை ஒரு வரிசைப்படுத்திக் கொண்டு சாப்பிடத் துவங்குங்கள். இப்படி செய்யும்போது ஆரோக்கியத்திற்கு கேடான எந்த விசயமும் நடக்காது. இந்த வழிமுறைகளைப் பின்பற்றி ஆரோக்கிமான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழுங்கள் என்று நடிகை சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.