ரஜினி ஸ்டைலில் மாஸ் காட்டும் பேபி: அஜித் பட நாயகி வெளியிட்ட வீடியோ

  • IndiaGlitz, [Wednesday,May 13 2020]

தல அஜீத் நடித்த ’அசல்’, சூர்யா நடித்த ’வாரணம் ஆயிரம்’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்தவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் வர்தே என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு மகனும், கடந்த ஆண்டு ஒரு மகளும் பிறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் அவ்வப்போது தனது மகன், மகள் குறித்த வீடியோக்களை தனது சமூக வலைப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் சமீரா ரெட்டி. அந்த வகையில் தற்போது அவர் ரஜினி ஸ்டைலில் தனது மகள் ஸ்டைலாக கண்ணாடி அணியும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

ஒரு வயது குழந்தை ரஜினி ஸ்டைலில் கண்ணாடியை மாற்றி மாற்றி அணியும் இந்த வீடியோ அனைத்து நெட்டிசன்களையும் கவர்ந்துள்ளது. ’மாஸ் பேபி’ என்றும் ’பேபி தலைவா’ என்றும் தனது மகளை குறிப்பிட்டுள்ள நடிகை சமீரா ரெட்டி, ‘பேர கேட்டதும் சும்மா அதிருதுல்ல’ என்ற ரஜினி வசனத்தையும் குறிப்பிட்டு உள்ளார்

சமீரா ரெட்டியின் ஒரு வயது மகளின் ரஜினி ஸ்டைல் மாஸ் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

More News

அசைவ உணவுமுறையால் கொரோனா வைரஸ் தொற்று பரவியதா??? விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்???

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவிய தருணத்தில் இருந்தே அவர்களின்  உணவு முறை பற்றி விவாதம் எழுப்பப்பட்டு வருகிறது.

இதை மட்டும் கொஞ்சம் கேட்டு சொல்லுங்க: மாஸ்டர் நடிகருக்கு ரசிகரின் கோரிக்கை

இந்திய திரையுலகின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்று போற்றப்படும் கே பாக்யராஜ் அவர்களுடைய திரைப்படம் குறித்து ஒரு சந்தேகத்தைக் கேட்டு உள்ள ரசிகர் ஒருவர்,

பழ வியாபாரிகளின் வண்டியை தள்ளிவிட்ட கமிஷனர்: சிலமணி நேரத்தில் நடந்த திருப்பம்!

கொரோனா அச்சம் காரணமாக மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள இந்த நேரத்தில் பல்வேறு தளர்வுகள் அரசால் விதிக்கப்பட்டதால் பல கடைகள் திறக்கப்பட்டுள்ளன

கவினை மறைமுகமாக அட்டாக் செய்தாரா லாஸ்லியா? 

கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களாக கவின் மற்றும் லாஸ்லியா ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.

கொரோனா போன்று உருளைக் கிழங்கை தாக்கும் “லேட் பிலைட்” நோய்த்தொற்று!!! மீண்டு வந்தது எப்படி???

உலகமே கொரோனா நோய்த் தொற்றின் பிடியில் சிக்கி தவிப்பது மாதிரி ஒரு காலத்தில் “லேட் பிலைட்” (Late Blight)  என்ற நோய்த்தொற்று உருளைக் கிழங்கு உற்பத்தியை முற்றிலும் நாசப் படுத்தியிருக்கிறது