close
Choose your channels

க்யூட் ஃபேமிலி.. கணவர் குழந்தைகளுடன் இயற்கையை ரசிக்கும் சமீரா ரெட்டி.. வைரல் புகைப்படங்கள்..!

Saturday, July 20, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமீரா ரெட்டி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கர்நாடகா - கோவா எல்லையில் உள்ள காட்டு பகுதியில் சுற்றுலா சென்றுள்ள நிலையில் அது குறித்த புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ளார். இயற்கை எழில் கொஞ்சும் அந்த பகுதியை அவர் ரசிக்கும் காட்சிகள் அதில் உள்ளன.

ஹிந்தி திரையுலகில் நடிகையாக அறிமுகமான சமீரா ரெட்டி, தமிழில் சூர்யா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’வாரணம் ஆயிரம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் அஜித் நடித்த ’ஆசை’ விஷால் நடித்த ’வெடி’ மாதவன் ஆர்யா நடித்த ’வேட்டை’ உட்பட சில படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் சமீரா ரெட்டி கடந்த 2014 ஆம் ஆண்டு அக்சய் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காடு மலை மற்றும் அருவிகள் நிறைந்த கோவா கர்நாடகா எல்லையில் உள்ள பகுதிக்கு கணவர், குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் சமீரா ரெட்டி சுற்றுலா சென்ற நிலையில் அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் சற்று முன் அவர்கள் தனது குடும்பத்துடன் காட்டில் இயற்கையை ரசிக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்துள்ள நிலையில் அவை இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment