'தளபதி 64' படத்தில் தரமான 'சம்பவம்' இல்லையா? படக்குழுவினர் விளக்கம்
- IndiaGlitz, [Monday,November 25 2019]
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக டெல்லியில் நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்தப் படப்பிடிப்பில் விஜய், மாளவிகா மேனன் உள்பட பலர் கலந்து கொண்டுள்ள நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் டெல்லி படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று படக்குழுவினரிடம் தகவல் வெளிவந்துள்ளது
இதனை அடுத்து சென்னை திரும்பும் படக்குழுவினர் சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாகவும், இந்த படப்பிடிப்பில் விஜய்சேதுபதி கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் ’தளபதி 64’ படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடலை கம்போஸ் செய்து முடித்து விட்டதாகவும், இந்த பாடலுக்கு ‘சம்பவம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் வெளி வர இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இன்னும் ஒரு சிலர் இந்த படத்தின் டைட்டிலே ‘சம்பவம்’ என்றும் தெரிவித்துள்ளனர்
இந்த நிலையில் இது குறித்து படக்குழுவினர் விளக்கம் அளித்தபோது ’தளபதி 64 படத்தின் பாடல் பெயரோ அல்லது படத்தின் பெயர் ’சம்பவம்’ என்று இதுவரை வைக்கப்படவில்லை என்றும் இது குறித்த செய்திகள் அனைத்தும் வதந்தியே என்றும் கூறியுள்ளனர். இதனை அடுத்து ’தளபதி 64’ படத்தில் தரமான சம்பவம் இல்லை என்பது உறுதியாகிறது
கல்லூரி பேராசிரியராக விஜய் நடிக்கும் இந்த படத்தில் மாளவிகா மேனன் ஜோடியாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாகவும்,மற்றும் முக்கிய கேரக்டர்களில் அந்தோணி வர்கீஸ், சாந்தனு, சஞ்சீவி, ரம்யா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது