மொட்டை ராஜேந்திரனுக்கு ஜோடியாகும் 'சமையல் மந்திர' நடிகை

  • IndiaGlitz, [Friday,June 23 2017]

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'சமையல் மந்திரம்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திவ்யாவை தெரியாத இளைஞர்கள் இருக்க முடியாது. இளசுகளை சுண்டி இழுக்கும் வகையில் அந்த நிகழ்ச்சியை நடத்திய திவ்யா தற்போது சீர்யல்கள் மற்றும் சினிமாவிலும் கால்பதித்துள்ளார்.
பிரபுதேவா நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் உருவாகி வரும் 'குலேபகாவலி' என்ற படத்தில் மொட்டை ராஜேந்திரனுக்கு மனைவியாக நடித்து வருகிறாராம். அதுமட்டுமின்றி மேலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்தாலும் சமூக சேவை செய்வதிலும் திவ்யாவுக்கு ஆர்வம் அதிகமாம். ஸ்ரீஆரோக்கியா ஹெல்த் & எஜுகேஷன்' என்ற அறக்கட்டளையை ஆரம்பித்துள்ள திவ்யா, இதன் மூலம் வசதியில்லாதவர்களுக்கு கல்வி உதவி, தொழில் தொடங்க உதவி என தன்னால் முடிந்த உதவிகளை அறக்கட்டளை மூலம் செய்து வருகிறார்.
மேலும் ஒரு ஏழை, கடைசி வரைக்கும் ஏழையாவே இருக்கக்கூடாது என்றும் அதை ஒழிப்பதுதான் தனது லட்சியம், எதிர்காலம் எல்லாம்' என்று கூறிய திவ்யா, பெற்றோரை இழந்த குழந்தைங்களைத் தத்தெடுத்து வளர்ப்பதற்காகவே கடினமாக உழைத்து சம்பாதித்து வருவதாக கூறியுள்ளார்.

More News

விஜய்க்கு 'மெர்சல்' படம் ஒரு வைரமகுடம். ஹேமாருக்மணி

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் இரண்டு லுக்குகள் வெளியாகி விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களாலும் வரவேற்கப்பட்ட நிலையில் இந்த படம் குறித்தும், விஜய் குறித்தும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமாருக்மணி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்

31 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.விசி-38 ராக்கெட். இஸ்ரோ சாதனை

இஸ்ரோ நிறுவனம் தயாரித்த பி.எஸ்.எல்.விசி-38 ராக்கெட், 31 செயற்கைகோள்களுடன் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாரத பிரதமர் நரேந்திரமோடி உள்பட தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

விஜய்-அஜித் படங்களை இயக்க வேற ஒரு மேஜிக் வேண்டும். பிரபல இயக்குனர்

ஜெயங்கொண்டான்', கண்டேன் காதலை', சேட்டை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கண்ணன் இயக்கிய 'இவன் தந்திரன்' திரைப்படம் விரைவில் ரிலிஸ் ஆகவுள்ளது

சிம்பு ரசிகர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி

சிம்பு, தமன்னா, ஸ்ரேயா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

விராத் கோஹ்லி இவ்வளவு அர்ப்பமானவரா? கும்ப்ளே ரசிகர்கள் கொதிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லிக்கும் பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது வெட்டவெளிச்சமானதை அடுத்து பயிற்சியாளர் பதவியில் இருந்து நாகரீகமாக விலகினார் கும்ப்ளே.