விஜய் பட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ள சமந்தா அடுத்து தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணையும் 'வடசென்னை' படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்ளவிருக்கின்றார். மேலும் அவர் தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் 'பிரம்மோத்சவம், மற்றும் ஜூனியர் என்.டி.ஆருடன் 'ஜனதா கேரேஜ்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி ரம்யாகிருஷ்ணன் கணவர் கிருஷ்ணவம்சி இயக்கும் 'ருத்ராக்ஷா' என்ற படத்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் 'கோலி சோடா', 10 'எண்றதுக்குள்ள' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் மில்டன் இயக்கும் அடுத்த படத்தில் ராஜகுமாரன் மற்றும் பரத் ஆகியோர்களுடன் இணைந்து சமந்தா நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த தகவலை சமந்தா தற்போது மறுத்துள்ளார். 'தெறி' படத்தை முடித்த பின்னர் தற்போது தமிழில் 'வடசென்னை' படத்தில் நடிக்க மட்டுமே ஒப்பந்தமாகியுள்ளதாகவும், இந்த படத்தை தவிர வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதன்மூலம் விஜய்மில்டன் படத்தில் நடிக்கவிருப்பதாக வெளிவந்த வதந்திக்கு சமந்தா முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout