உலக வரைபடத்தை இலைகளில் வரைந்து தத்துவ மழை பொழிந்த சமந்தா: 

  • IndiaGlitz, [Sunday,June 21 2020]

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய சமந்தா, இந்த லாக்டவுன் விடுமுறையை வீட்டிலேயே விவசாயம் செய்து பயனுள்ளதாக கழித்து வருகிறார். வீட்டிலேயே விவசாயம் செய்யும் சமந்தாவின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது வீட்டில் வளர்ந்த செடியின் பூக்கள் மற்றும் இலைகளாலேயே உலக வரைபடத்தை வரைந்துள்ள சமந்தா, அதனை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு வாழ்த்துக்களும், லைக்ஸ்களும் குவிந்துள்ள நிலையில் இந்த பதிவில் ஒரு தத்துவத்தையும் சமந்தா பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

பச்சை என்பது நம்பிக்கை, குணப்படுத்துதல் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றினை குறிக்கும் ஒரு நிறம். நாம் நம் வாழ்க்கையில் இந்த நேரத்தை திரும்பிப் பார்ப்போம், நாம் ஒருபோதும் ஒருவருக்கொருவர் கைவிடாத வகையில் நடந்து கொண்டு பெருமைப்படுவோம்’ என்று கூறியுள்ளார். மேலும் இலைகளால் உலக வரைபடத்தை செய்ய உதவி செய்தவர்களுக்கும் அவர் நன்றி கூறியுள்ளார். சமந்தாவின் இந்த சமூக வலைத்தல பதிவு வைரலாகி வருகிறது.

More News

உடுமலை சங்கர் கொலை வழக்கில் நாளை தீர்ப்பு: மரண தண்டனை ரத்து செய்யப்படுமா?

திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியை சேர்ந்த கௌசல்யா என்ற கல்லூரி மாணவி தன்னுடன் படித்த சங்கர் என்ற மாணவரை கடந்த 2015 ஆம் ஆண்டு காதலித்தார்.

ஓஷோவை எனக்கு அறிமுகம் செய்தவர்: மறைந்த இயக்குனர் சச்சி குறித்து பிரபல தமிழ் நடிகை

மலையாள திரையுலகில் 'அய்யப்பனும் கோஷியும்' என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய சச்சிதானந்தம் என்ற சச்சி சமீபத்தில் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தது

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் வீடியோ

தனுஷ் நடித்த வெற்றிப் படங்களில் ஒன்று 'மாரி'. இந்த படத்தில் தனுஷ் சிக்ஸ்பேக் வைத்திருக்கும் ஒரு காட்சியில் நடித்து இருப்பார். இந்த காட்சியை பலர் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்னை கிண்டலடித்தனர்

நாளை நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாமா???

நாளை நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது, பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு வரும் என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்

4வது நாளாக 2000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: பலி எண்ணிக்கையும் அதிகரிப்பதால் பரபரப்பு

தமிழகத்தில் தினமும் நூற்றுக்கணக்கில் மட்டுமே இருந்த கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தொட்டு, தற்போது கடந்த மூன்று நாட்களாக இரண்டாயிரத்தை தாண்டி வரும் நிலையில்