நீங்கள் இல்லாமல் நான் எப்படி? பிரபல பாடகியின் கணவருடன் சமந்தா!

  • IndiaGlitz, [Tuesday,January 04 2022]

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீங்கள் இல்லாமல் நான் எப்படி? என பிரபல பாடகி ஒருவரின் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

தமிழில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்திலும் தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகும் இரண்டு புதிய திரைப்படங்கள் உள்பட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து பிசியான நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா என்பது தெரிந்ததே.

அதுமட்டுமின்றி ’தி ஃபேமிலிமேன் 2’ தொடரின் இயக்குநர் ராஜ்&டிகே இயக்கத்தில் உருவாக இருக்கும் இன்னொரு வெப்தொடரிலும் சமந்தா நடிக்க உள்ளார் என்பதும், மேலும் ஹாலிவுட் வெப்தொடர் ஒன்றிலும் சமந்தா நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் சமந்தாவுக்கு 20 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல பின்னணி பாடகி சின்மயி கணவர் ராகுல் ரவீந்திரா மற்றும் நடிகர் வெண்ணிலா கிஷோர் ஆகியோர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ’நீங்கள் இல்லாமல் நான் எப்படி இருப்பேன்? என கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார்.

பாடகி சின்மயி, சமந்தாவின் நெருங்கிய தோழி என்பதும், சமந்தாவின் பெரும்பாலான படங்களுக்கு சின்மயி தான் பின்னணி குரல் கொடுப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமந்தா பதிவு செய்துள்ள இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அரவிந்தசாமி அடுத்த படத்தின் அட்டகாசமான டீசர்: இணையத்தில் வைரல்!

கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் அரவிந்த்சாமி என்பதும் ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் தற்போது மீண்டும் தமிழ் திரையுலகில் பிஸியாக நடித்து வருகிறார்

பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்குகிறதா 'ராதே ஷ்யாம்? இயக்குனர் தகவல்

கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதன் காரணமாக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள் உள்பட அனைத்து துறைகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு

'வெந்து தணிந்தது காடு' படத்தில் இணைகிறாரா பிக்பாஸ் வருண்?

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் வருண்

கோமா நோயாளிக்கு வயாகரா கொடுத்து காப்பாற்றிய சம்பவம்… நடந்தது என்ன?

இங்கிலாந்து நாட்டிலுள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனாவால்

பிரபல நடிகையை வாட்ஸ் அப்பில் பிளாக் செய்த ரிஷப் பண்ட்… என்ன காரணம்?

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராகவும் முன்னணி பேட்ஸ்மேனாகவும்