நாகார்ஜூனா குடும்பத்தின் முக்கிய நபருக்கு வாழ்த்து கூறிய சமந்தா: ஏன் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,April 09 2022]

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த நடிகை சமந்தா திடீரென நாகார்ஜூனா குடும்பத்தை சேர்ந்த முக்கிய நபர் ஒருவருக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகிய இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரிவதாக அறிவித்தனர். இந்த பிரிவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . விவாகரத்துக்கு பின்னர் நாகார்ஜூனா குடும்பத்தைச் சேர்ந்த யாரிடமும் சமந்தா தொடர்பில் இல்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென நாக சைதன்யாவின் சகோதரர் அகில் அக்கினேனி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய போது அவருக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா வாழ்த்து கூறியுள்ளார்.அந்த வாழ்த்தில், ‘இந்த ஆண்டு உங்களுக்கு மிகச் சிறந்த ஆண்டாக இருக்கும் என்றும் இந்த ஆண்டு நீங்கள் நினைத்த அனைத்துமே கிடைக்க நான் இறைவனை வேண்டுகிறேன் என்றும் கடவுள் உங்களுக்கு அருள் புரிவார் என்று தனது வாழ்த்துச் செய்தியில் சமந்தா கூறியுள்ளார்.

நாகசைதன்யாவின் பிறந்தநாளுக்கு கூட வாழ்த்து தெரிவிக்காத சமந்தா, அவருடைய சகோதரருக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்தது ஏன் என்ற கேள்வி ரசிகர் மனதில் எழுந்துள்ளது.

More News

சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ்? கார்த்திக் சுப்புராஜ் திட்டம்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 

ஜெயம் ரவியின் அடுத்த படமும் ஓடிடி ரிலீஸா?

ஜெயம்  ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'பூமி' திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் அவருடைய அடுத்தப் படமும் ஓடிடியில் ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

ஒரே ஷாட்டில் உருவான 'இரவின் நிழல்': சூப்பர் அப்டேட் தந்த பார்த்திபன்!

பார்த்திபன் என்ற ஒரே ஒரு கேரக்டர் மட்டுமே நடித்த 'ஒத்த செருப்பு' என்ற திரைப்படம் கடந்த 2019 ம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஒரே ஷாட்டில் பார்த்திபன்

'குக் வித் கோமாளி' பிரபலத்தின் திரைப்படத்தை அறிமுகம் செய்து வைக்கும் சிம்பு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் தற்போது 3வது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது

'அரபிக்குத்து' பாடலுக்காக அசோக்செல்வனிடம் மன்னிப்பு கேட்ட சம்யுக்தா ஹெக்டே: வைரல் வீடியோ!

 'மன்மத லீலை' நாயகி சம்யுக்தா ஹெக்டே தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதற்காக நடிகர் அசோக்செல்வனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.