சிகிச்சைக்காக எந்த நாட்டிற்கு செல்கிறார் சமந்தா? பரபரப்பு தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை சமந்தா தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களை முடித்தவுடன் திரை உலகிற்கு ஒரு வருடம் பிரேக் எடுக்க போவதாக செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம்.
தற்போது அவர் விஜய் தேவரகொண்டா உடன் ’குஷி’ மற்றும் பாலிவுட் வெப் தொடர் ‘சிட்டாடல்’ ஆகியவற்றில் நடித்து வரும் நிலையில் இந்த இரண்டையும் முடித்துவிட்டு இன்னும் ஒரு சில நாட்களில் அவர் பிரேக் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நடிகை சமந்தா வேறு எந்த புதிய படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றும் சில படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டதில் வாங்கிய அட்வான்ஸ் திருப்பி கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின்படி நடிகை சமந்தா சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் அங்கு அவர் மையோசிட்டிஸ் நோய்க்கு தீவிர சிகிச்சை எடுத்துக் கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் மன அழுத்தத்திலிருந்து அவர் முழுமையாக விடுபட சில நாட்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர் கூறி இருப்பதால் அமெரிக்காவில் அவர் சில மாதங்கள் தங்கி இருந்து சிகிச்சை செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments