இந்த நடிகருடன் ரொமான்ஸ் செய்ய வேண்டும்: சமந்தா தெரிவித்த விருப்பம்!

  • IndiaGlitz, [Tuesday,May 25 2021]

திருமணத்திற்கு பின்னரும் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் பிஸியாக இருக்கும் நடிகை என்றால் அது சமந்தா தான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் அவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்திலும் தெலுங்கில் ‘சாகுந்தலம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமந்தா நடித்து முடித்துள்ள ’தி ஃபேமிலிமேன் 2’ என்ற தொடர் விரைவில் அமேசான் ப்ரைமில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பாலிவுட் திரையுலகில் தனக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை என்றும் குறிப்பாக ஒரு ரொமாண்டிக் படத்தில் ரன்பீர் கபூருடன் நடிக்க வேண்டும் என்று விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை பாலிவுட் படத்தில் தான் நடிக்காததற்கு காரணம் பாலிவுட்டில் அதிக திறமையானவர்கள் இருப்பதால்தான் என்று நகைச்சுவையுடன் அவர் தெரிவித்தார். ரன்பீர் கபூருடன் நடிக்க வேண்டும் என்ற சமந்தாவின் ஆசை விரைவில் நிறைவேறும் என்று அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.