சென்னை கல்லூரியில் திடீர் விசிட் அடித்த சமந்தா.. மாணவ, மாணவிகள் உற்சாக வரவேற்பு..!

  • IndiaGlitz, [Saturday,February 17 2024]

நடிகை சமந்தா சென்னையில் உள்ள கல்லூரிக்கு திடீர் விசிட் அடித்த நிலையில் மாணவ மாணவிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா கடந்த சில மாதங்களாக ஓய்வெடுத்த நிலையில் தற்போது மீண்டும் திரையுலகில் ரீஎண்ட்ரி ஆகி உள்ளார். அவரது நடிப்பில் தற்போது ’சிட்டாடல்’ என்ற வெப் தொடரின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க அவர் கதை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் முழு உடல் தகுதியுடன் உற்சாகமாக மீண்டும் சென்னை திரும்பிய சமந்தா சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்திற்கு திடீரென விசிட் அடித்தார். அவரது வருகை பார்த்து இரு பக்கமும் மாணவ மாணவிகள் அவருக்கு உற்சாகமாக கைதட்டி வரவேற்பு அளித்தனர். இது குறித்த வீடியோவை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

இந்த வீடியோ பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் சுமார் 10 லட்சம் லைக் குவிந்துள்ளது. பாடகி சின்மயி உள்பட பலர் இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்துள்ளனர். மேலும் இந்த விழாவிற்கு வருகை தந்த போது அவர் அணிந்திருந்த வித்தியாசமான டிசைனில் உள்ள உடை குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

More News

'தலைவர் 171' படப்பிடிப்பு எப்போது? 'லியோ 2' உருவாகுமா? லோகேஷ் கொடுத்த அப்டேட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'தலைவர் 171' படத்தின் படப்பிடிப்பு எப்போது மற்றும் விஜய்யின் 'லியோ 2' உருவாகுமா? ஆகிய கேள்விகளுக்கு இன்று நடந்த நிகழ்ச்சியின் போது லோகேஷ் கனகராஜ் அப்டேட்

ஸ்பெஷல் பிரியாணியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. யாருடன் தெரியுமா?

இன்று நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் என்பதால் இன்று காலை முதலே அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள், தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து

19 வயது இளம் நடிகை மர்ம மரணம்.. பிரபல நடிகருக்கு மகளாக நடித்தவர்..!

பிரபல நடிகருக்கு மகளாக நடித்த 19 வயது நடிகை திடீரென மரணம் அடைந்ததை அடுத்து திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

நிதி ஒதுக்கி, குழுக்கள் அமைத்தாலும் மேகதாதுவில் எந்த காலத்திலும் அணைக்கட்ட முடியாது: துரைமுருகன் திட்டவட்டம்

மேகதாதுவில் எந்த காலத்திலும் கர்நாடகா அணைக்கட்ட முடியாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

விஜய், அஜீத்தின் முடிவை பார்த்து பயப்படும் திரையரங்கு உரிமையாளர்கள்.. என்ன காரணம்?

நடிகர் விஜய் மற்றும் அஜீத் ஆகியோரின் திரையுலக பயணம் குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் பயப்படுவதாக பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.