விஜய் தேவரகொண்டா - சமந்தாவின் 'குஷி' ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,March 23 2023]

சமந்தா நடித்த ’சாகுந்தலம்’ என்ற திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சமந்தாவின் அடுத்த திரைப்படமான ’குஷி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’குஷி’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமந்தாவின் உடல்நிலை காரணமாக சில மாதங்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதியுடன் கூடிய அட்டகாசமான போஸ்டரை சமந்தா தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், வெண்ணிலா கிஷோர், லட்சுமி, ரோஹினி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தை ஷிவா நிர்வானா என்பவர் இயக்கி உள்ளார். ஹேஷம் அப்துல் வகாப் இசையில் முரளி ஒளிப்பதிவில் ப்ரவின்புடி ப்டத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.