அல்லு அர்ஜுனனுக்காக நான் அழவில்லை.. சமந்தா வெளியிட்ட உருக்கமான வீடியோ..!
- IndiaGlitz, [Sunday,December 15 2024]
நடிகர் அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து வீடு திரும்பிய நிலையில், அவரை அவரது மனைவி கட்டி அணைத்து கண்ணீர் விட்ட வீடியோவை நடிகை சமந்தா தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், நான் அழவில்லை என கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா2’ திரைப்படம் கடந்த 5ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை பார்க்க ரேவதி என்ற பெண் தியேட்டருக்கு தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வந்திருந்தார். அப்போது திடீரென அல்லு அர்ஜுன் வந்ததால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, ரேவதி உயிரிழந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். அதன் பின், தெலுங்கானா ஐகோர்ட் உத்தரவின் பேரில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
சிறையில் இருந்து வெளியே வந்த அவர், தனது வீட்டிற்கு சென்றபோது, வாசலில் வந்து அவரை வரவேற்ற அவரது மனைவி, கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டார். அவருடைய குழந்தைகளும் அவர் அருகில் இருந்து அவரை அணைத்து மகிழ்ந்தனர்.
இந்த குறித்த வீடியோவை நடிகை சமந்தா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, நான் அழவில்லை என்று குறிப்பிட்டாலும், ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் எமோஜிகளை இணைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவலாக வைரல் ஆகி வருகிறது.