சமந்தாவின் வேற லெவல் வொர்க்-அவுட் வீடியோ: காஷ்மீர் போனாலும் விடுவதில்லை!

  • IndiaGlitz, [Friday,May 13 2022]

நடிகை சமந்தா தற்போது காஷ்மீரில் விஜய்தேவரகொண்டா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் அங்கும் அவர் அதிகாலை நேரத்தில் ஜிம் சென்று ஒர்க் அவுட் செய்யும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா சற்று முன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். நான் எங்கே சென்றாலும் இந்த ஒரு பழக்கத்தை மட்டும் விடுவதில்லை என்ற முடிவில் இருக்கிறேன் என்று கூறிய அவர் தனது பயிற்சியாளரின் உதவியுடன் பலுதூக்கும் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரலாகி வருகிறது .

நடிகை சமந்தா தற்போது ’ஷாகுந்தலம்’, ‘யசோதா’ மற்றும் விஜய் தேவர்கொண்டா உடன் ஒரு திரைப்படம் என மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹாலிவுட் வெப்தொடர் ஒன்றிலும் ‘தி ஃபேமிலிமேன்’ இயக்குனர்களின் அடுத்த தொடரிலும் விரைவில் சமந்தா நடிக்கவுள்ளார்.