சமந்தாவின் அடுத்த பட டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் ஆச்சரிய தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, திருமணத்திற்கு பின்னரும் வரிசையாக வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி ஒரே நாளில் சமந்தா நடித்த 'சீமராஜா' மற்றும் 'யூடர்ன்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இரண்டு திரைப்படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் இரண்டுமே வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் 'யூடர்ன்' திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை சமந்தா சற்றுமுன் வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் டிரைலர் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைக்கும் அளவுக்கு த்ரில் காட்சிகள் கொண்ட இந்த படத்தின் டிரைலர் அனைவரையும் கவரும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார். மேலும் சில ரசிகர்களுக்கு தன்னுடன் அமர்ந்து இந்த டிரைலரை பார்க்கும் அதிர்ஷ்டமும் கிடைத்துள்ளதாக ஆச்சரியம் தரும் தகவலையும் சமந்தா தெரிவித்துள்ளார்.
சமந்தா, ஆதி, ராகுல் ரவீந்திரன், பூமிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பவன்குமார் இயக்கியுள்ளார். பூமசந்திர தேஜஸ்வா இசையில் நிகேத் பொமி ஒளிப்பதிவில் சுரேஷ் ஆறுமுகம் படத்தொகுப்பில் உருவாகிய்ஹுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் வரும் செப்டம்பர் 13ல் வெளிவருகிறது.
Trailer launch on the 17th of this month ??Hope you guys are excited. Promising an edge of your seat thriller . A lucky few will be among the first to watch the trailer with us. @pawanfilms @AadhiOfficial @23_rahulr @SS_Screens @UTurnTheMovie #UTurnonSept13 #UTurnTrailerOnAug17 pic.twitter.com/20oX3v6Umi
— Samantha Akkineni (@Samanthaprabhu2) August 11, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com