அமைதியுடன் நம்பிக்கையாக இருங்கள்: 'தி பேமிலிமேன் 2' சர்ச்சைக்கு இடையே சமந்தாவின் பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை சமந்தா நடித்த வெப் தொடர் ‘தி பேமிலிமேன் 2’. இந்த தொடர் வரும் ஜூன் மாதம் நான்காம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த தொடரின் டிரைலர் வெளியானது. இந்த டிரைலர் மாபெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருந்தாலும் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொடரை வெளியிடக்கூடாது என பல அரசியல் இயக்கங்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக நாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இந்தத் வெப்தொடரை வெளியிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் ’அமைதியாக இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள்’ என்று பதிவு செய்து மார்ட்டின் லூதர் கிங்கின் பொன்மொழியான ’முழுப்பாதையும் தென்படாவிட்டாலும் முதலடியை எடுத்து வைப்பதற்கு நம்பிக்கையே முக்கியம்’ என்பதையும் பதிவு செய்துள்ளார். தி பேமிலிமேன் 2’ தொடரின் சர்ச்சைக்கு மத்தியில் சமந்தாவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
— Samantha Akkineni (@Samanthaprabhu2) May 21, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com