என் கனவு நனவாகிவிட்டது: சமந்தாவின் சந்தோஷ டுவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமந்தா நடித்த படத்தின் படப்பிடிப்பு ஒன்று முடிவடைந்த நிலையில் இந்த படத்தில் தான் நடித்ததை அடுத்து தனது சிறுவயது கனவு நனவாகி உள்ளது என்றும் அதை நனவாக்கியவர் இந்த படத்தின் இயக்குனர் என்றும் சந்தோசமாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
பிரபல இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’சாகுந்தலம்’. இவர் ஏற்கனவே அனுஷ்கா ஷெட்டி நடித்த ’ருத்ரமாதேவி’ உள்பட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காளிதாசர் இயற்றிய சாகுந்தலம் என்ற நூலின் அடிப்படையில் உருவான இந்த படத்தில் சகுந்தலை கேரக்டரில் சமந்தா நடித்து இருந்தார் என்பதும் மேலும் இந்த படத்தில் மோகன்பாபு, அதிதி பாலன், கவுதமி உள்பட பலர் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிசர்மா இசையில் உருவாகிய இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர் சிறப்பாக கொண்டாடினர். இதுகுறித்து சகுந்தலை கேரக்டரில் நடித்த சமந்தா தனது டுவிட்டரில் கூறியபோது ’என் சிறு வயதில் நான் விசித்திரமான கதைகளை நம்புவேன். இப்போது நான் அதில் இருந்து மாறவில்லை. இப்படி ஒரு சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவு. அந்த கனவை நனவாக்கிய இயக்குனர் குணசேகரன் அவர்களுக்கு எனது நன்றி என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இறுதி நாள் படப்பிடிப்பு குறித்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் மகள் அர்ஹா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
And it’s a wrap on Shaakuntalam !!
— S (@Samanthaprabhu2) August 12, 2021
This film will stay with me for the rest of my life .As a little girl I believed in fairy tales .. not much has changed .I still do ❤️....and @Gunasekhar1 sir my fairy godfather ☺️ for making my dream a reality . pic.twitter.com/yYootg3DnM
Today as I say my goodbyes , I have such an immense feeling of love and gratitude ,to this absolutely incredible human @gunasekhar1 sir ,for he has created a world that has exceeded all my expectations .The inner child in me is dancing with joy. Thankyou sir ♥️
— S (@Samanthaprabhu2) August 12, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments