மாத்திரை சாப்பிட்டு நயன்தாரா படம் பாருங்கள்: ராதாரவிக்கு சமந்தா ஆலோசனை
- IndiaGlitz, [Tuesday,March 26 2019]
நடிகை நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி பேசிய சர்ச்சைக்குரிய கருத்து நேற்று திரையுலகினர்களை மட்டுமின்றி அரசியல் உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ராதாரவிக்கு நடிகர் சங்கமும், ஒட்டுமொத்த திரையுலகமும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ராதாரவிக்கு கிண்டலுடன் கூடிய ஆலோசனை ஒன்றை கூறியுள்ளார். ராதாரவி தான் செய்தது சரி என நிரூபிக்க போராடுவதாகவும், அவரை பார்த்தால் தனக்கு பாவமாக இருப்பதாகவும் கூறிய சமந்தா, அவருடைய ஆன்மா அமைதியை தேட விரும்புவதாகவும், அந்த அமைதி நயன்தாராவின் சூப்பர் ஹிட் படத்தை பார்த்தால் கிடைக்கும் என்றும், அதற்காக தான் டிக்கெட் அனுப்புவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் மன அமைதிக்காக பாப்கார்னோடு மாத்திரையையும் சேர்த்து சாப்பிட்டால் ராதாரவிக்கு குணமாகிவிடும் என்றும் சமந்தா கிண்டலுடன் கூடிய ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். சமந்தாவின் இந்த கருத்துக்கு பெரும்பாலான நெட்டிசன்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது