ஜூன் முதல் சமந்தாவுடன் மேஜிக் செய்யும் விஜய்

  • IndiaGlitz, [Monday,May 15 2017]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் சென்னை மற்றும் ராஜஸ்தான் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இந்த படப்பிடிப்பில் பஞ்சாயத்து தலைவர் விஜய் மற்றும் நித்யாமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்த நிலையில் தற்போது டாக்டர் கேரக்டர்களில் நடிக்கும் விஜய்-காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிவடைந்துவிடும் என்றும் அதன் பின்னர் மீண்டும் சென்னையில் வரும் ஜூன் முதல் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

சென்னையில் நடைபெறவுள்ள அடுத்தகட்ட படப்பிடிப்பில் விஜய்யின் மூன்றாவது கேரக்டரான மேஜிக்மேன் கேரக்டரின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் இந்த படப்பிடிப்பு சமந்தா கலந்து கொள்ளவுள்ளதாகவும் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே விஜய்யின் மூன்றாவது கேரக்டர் மேஜிக்மேன் கேரக்டர் என்றும் அவருக்கு ஜோடி சமந்தா என்பதையும் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகின்றார்.

More News

உங்களுடன் பணிபுரிய வேண்டும் என்பது என் கனவு: அட்லி குறிப்பிடுவது யாரை?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்த அட்லி, பின்னர் 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். முதல் படம் கொடுத்த வெற்றியால் அவருக்கு இளையதளபதி விஜய்யின் 'தெறி' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது

தமிழ் மக்கள் ஏமாறுவது ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்தான். ரஜினி பேச்சின் முழுவிபரம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் இன்று நேரடியாக ரசிகர்களை சந்தித்துள்ளார். இன்று திண்டுக்கல், கரூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ரசிகர்களை சந்தித்த அவர் ரசிகர்களிடையே தனது சமீபத்திய அனுபவங்கள், அரசியலுக்கு வருவது, மற்றும் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்...

'சாவித்ரி' படத்தில் சமந்தா ஜோடி இவர்தான்

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் படமாக்கப்படவுள்ளது என்றும், இதில் சாவித்ரி வேடத்தில் கீர்த்திசுரேஷ் மற்றும் ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் ஆகியோர் நடிக்கவுள்ளதும் தெரிந்ததே...

இந்த வருடம் நான்கு இசை விருந்துகள்: அனிருத்

கடந்த 2011ஆம் ஆண்டு தனுஷின் '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், இந்த 6 வருடங்களில் மொத்தம் 14 படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால் இந்த ஆண்டு மட்டுமே அவர் இசையமைத்த நான்கு படங்கள் வெளியாகவுள்ளதாக தெரிகிறது...

இன்று நடிகன், நாளை நான் யாரோ? ரசிகர்களிடையே ரஜினியின் உணர்ச்சி பேச்சு

இன்று ரசிகர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது எதிர்காலம், அரசியல் வாழ்க்கை, ஆன்மீகம் ஆகியவை குறித்து உணர்ச்சி பெருக்குடன் பேசினார்...